Monday, 19 March 2018

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா..?

* கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் கருப்பட்டியை மெல்லும் போது, வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி.

* முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.

* கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல் கருப்பட்டி.
* கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலி.

* வயது முதிர்ந்த கிராமத்து ஆட்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து பார்த்து அதன் மணத்தை வைத்து ஒரிஜினலா, போலியா என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.

* தேங்காயைத் தட்டிப்பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி கருப்பட்டி.

* ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.

* நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.

* கருப்பட்டி வாங்கும்போது தட்டிப்பார்த்தும், நுகர்ந்தும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சிறு துண்டை உடைத்து வாயில் போட்டு மென்று பாருங்கள். கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையில் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.

கட்டை கூத்து

முகத்தில் வண்ணங்கள் பூசி, காலில் சலங்கை கட்டி, உரத்த குரலில் கூத்து கட்டுவது இப்போதும் சில கிராமங்களில் அபூர்வமாக இருக்கிறது. கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இந்தக் கலை இருக்கிறது என்பதுதான் சோகம். இந்நிலையில் தனது கணீர் குரலாலும், திறமையான நடிப்பாலும் இக்கலைக்கு உயிர் கொடுத்து வருகிறார் தமிழரசி. இத்தனைக்கும் இவருக்கு வயது 21தான். 

‘‘சொந்த ஊர், பெருகட்டூர் கிராமம். காஞ்சிபுரத்துலேந்து 25 கி.மீ. தொலைவுல இருக்கு. அப்பா, நிலத்தரகர். அம்மா, இல்லத்தரசி. ஒரு அண்ணன், இரண்டு அக்கான்னு கூட பிறந்தவங்க மூன்று பேர். அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு. நான் கடைக்குட்டி. 8 வயசுல கட்டைக்குட்டு குருகுலத்துல சேர்ந்தேன். பள்ளிப் படிப்பையும் முடிச்சேன். கூத்தும் கத்துகிட்டேன். ப்ளஸ் 2ல நல்ல மார்க் வாங்கியிருக்கேன். டிகிரி முடிக்கணும். ஆனா, கூத்துக்கே நேரம் சரியா இருக்கு. இருந்தாலும் எப்படியாவது தபால் மூலமா படிச்சு டிகிரி வாங்கிடுவேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் தமிழரசி. 

‘‘கட்டைக்குட்டு குருகுலத்தை நிறுவியவர், ராஜகோபால். அப்பாவோட நண்பர். அவங்களோட குடும்பக் கலையே இதுதான். தாத்தா, அப்பான்னு வழி வழியா கூத்து கட்டிருக்காங்க. அதனால ராஜகோபால் சாருக்கும் இயல்பிலேயே கூத்து மேல ஆசை வந்திருக்கு. தன்னோட 10 வயசுலேந்து கூத்து கட்ட ஆரம்பிச்சிருக்காரு.பெண்களை முதன் முதல்ல கூத்து கட்ட வைச்சது இவர்தான்னு சொல்லலாம். சொந்தமா கதை, வசனம், பாடல் எல்லாம் எழுதி இயக்குவார். 1990ம் வருஷத்துல ‘கட்டைக்குட்டு சங்கம்’ அப்படீங்கிற பட்டறையை தொடங்கினாரு. 

அதுவே 2002ல ‘கட்டைக்குட்டு குருகுலமா’ மாறிச்சு. இந்த குருகுலத்தோட விசேஷம் என்னன்னா பள்ளிப் படிப்பையும் கூத்தையும் சமமா சொல்லித் தருவாங்க. அப்ப எனக்கு எட்டு வயசு. அரசு மேல்நிலைப் பள்ளில படிச்சுட்டு இருந்தேன். அப்பாவை சந்தித்து, இது மாதிரி ஒரு பள்ளி தொடங்கியிருக்கறதாவும் கூத்துக் கலையும் கற்று கொடுப்பதாவும் ராஜகோபால் சார் சொன்னார். படிப்பு தவிர ஒரு கலையும் கத்துக்கறது நல்லதுன்னு நினைச்ச எங்கப்பா, 2003ல என்னை இங்க சேர்த்தாரு. புது இடம், புதிய ஆட்கள். குருகுலம் என்பதால் வீட்டுக்கும் போக முடியாது. ஆரம்பத்துல மிரட்சியா இருந்தது. ஆனா, என் வயசு பசங்க அங்க இருந்ததால சீக்கிரமே குருகுலத்துக்கு தகுந்தா மாதிரி என்னை மாத்திகிட்டேன். 

இங்க வந்து 13 வருஷங்கள் ஆகிடுச்சு. இவ்வளவு காலம் எப்படி போச்சுன்னே தெரியலை. ஸ்டூடன்டா இருந்த நான் இப்ப பயிற்சியாளரா இருக்கேன்.காலை 7:30க்கு ஸ்கூல் தொடங்கும். அதனால அதுக்கு முன்னாடியே எழுந்து எல்லா வேலைகளையும் முடிச்சுடுவோம். மதியம் ஒரு மணி வரை அந்தந்த வகுப்புக்கான பாடங்கள் நடக்கும். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூத்து பயிற்சி தொடங்கும். பாடறது, ஆடறது, வசனம் பேசறது, நடிக்கறதுன்னு ஒவ்வொரு பயிற்சியா நடக்கும். 

‘கட்டை’ன்னா மரக்கட்டை. ‘குட்டு’ என்பது கூத்தை குறிக்கிற சொல். அதனாலதான் குருகுலத்துக்கு இந்த பேரு. எங்களுடையது கூத்தோட ஒரு வகை.அதாவது, பாரம்பரிய கூத்து சாலைல நடக்கும். நாங்க பெரிய மைதானத்துல மேடை போட்டு அரங்கேற்றுவோம். அதே மாதிரி பாரம்பரிய கூத்துல ஆண்களேதான் பெண் வேஷமும் போடுவாங்க. இங்க அப்படியில்லை. பெண்களே சலங்கை கட்டி பெண் வேடம் ஏற்பாங்க. அதுமட்டுமில்ல ஆண் வேஷத்தையும் பெண்களேதான் போடுவாங்க! 

பாடல், வசனம், நடனம், மேக்கப், ஆபரணம்னு எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். தொடக்கத்துல ஒரு பாட்டுக்கு எப்படி கூத்து கட்டறதுன்னு சொல்லிக் கொடுப்போம். அதுக்கான நடன அமைப்பு, முகபாவனைன்னு எல்லாமே. அப்புறம் வசன பயிற்சி. இதுக்கு பிறகுதான் முழு நாடகத்துக்கான பயிற்சி.ஒரு கதை எட்டு மணி நேரம் வரைக்கும் போகும். இடைவேளை எல்லாம் கிடையாது. அதாவது, இரவு பத்து மணிக்கு கூத்து ஆரம்பிச்சா, மறுநாள் காலை ஆறு மணிக்குதான் முடியும். இப்படி விடிய விடிய நடக்கறதை மக்களும் சலிக்காம பார்ப்பாங்க.

ஏற்கனவே சொன்னா மாதிரி ஆண் வேஷத்தையும் பெண்களேதான் போடுவோம். அதனால எல்லாருக்குமே இரு வேடத்துக்கான பயிற்சியை அளிப்போம். இதனால எல்லாருக்கும் எல்லா கதாபாத்திரமும் தெரியும்.கூத்தை பொறுத்தவரைக்கும் அடவுதான் முக்கியம். அதாவது, டான்ஸ் ஸ்டெப்ஸ். இதுல மொத்தம் எட்டு அடவுகள் இருக்கு. பரதம் மாதிரி முத்திரைகள் இருக்காது. ஆனா, கதகளி மாதிரி சில அசைவுகள் இருக்கும். அதுக்காக இதை கதகளின்னும் சொல்லிட முடியாது. 

எட்டு வயசுல பயிற்சி ஆரம்பிச்சது. ஒன்பது வயசுல மேடை ஏறினேன். ‘வில் வளைப்பு திரவுபதி’ நான் ஆடிய முதல் கூத்து. இதுல திரவுபதிக்கு தோழியா நடிச்சேன். மூணு வருஷம் இது மாதிரி சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்தான். அதுக்கு பிறகுதான் திரவுபதி, அர்ச்சுனன், அபிமன்யுன்னு முக்கிய கதாபாத்திரங்கள் செய்ய ஆரம்பிச்சேன்...’’ என்று சொல்லும் தமிழரசிக்கு பிடித்தது திரவுபதி வேடமாம்.‘‘அந்த கம்பீரத்துக்கு நான் அடிமை. துரியோதனன் கிட்ட கோபத்தோட பேசறப்ப அந்த கேரக்டராவே மாறிடுவேன். 

முதன் முதல்ல அந்த கதாபாத்திரத்துக்கு என்னை தேர்ந்தெடுத்தப்ப பல நாட்கள் இரவு தூங்காம பயிற்சி எடுத்தேன். அதே போல அபிமன்யு என்னை பாதித்த கேரக்டர்னு சொல்லலாம். சின்ன வயசுல அந்த பிஞ்சு மனசுல இருந்த தைரியம் எப்பவும் என்னை நெகிழ வைக்குது...’’ என்று சிரித்தவர், கூத்துக்கான ஆரம்ப கட்டங்களை குறித்து சிலாகிக்கத் தொடங்கினார். ‘‘ஆபரணங்களை நாங்களேதான் வடிவமைப்போம். கிரீடம், தோள் பட்டை, கழுத்து... இப்படி ஆபரணம் இல்லாம நடனமாட மாட்டோம். இதையெல்லாம் கல்யாண மரக் கட்டைல செய்து, வண்ணம் தீட்டி, கண்ணாடி பதிச்சு, கலர் கலர் பேப்பர்களை ஒட்டித்தான் உருவாக்குவோம். 

மரக்கட்டைங்க அதிக எடை இருக்காது. ஆனாலும் எல்லா ஆபரணங்களையும் அணிந்து நடனமாடறது சுலபமில்லை. நிறைய பயிற்சி எடுக்கணும். முதன் முதல்ல கிரீடம் அணிஞ்சு நான் நடனமாடினப்ப கஷ்டப்படலை. வேகமா ஆடினேன். அதைப் பார்த்துட்டுத்தான் ராஜகோபால் சார் என்னால பெரிய கதாபாத்திரங்களையும் செய்ய முடியும்னு நம்பிக்கை தந்தார். ஆனா, முக்கிய கதாபாத்திரம் ஏற்றப்ப நடக்கவே சிரமப்பட்டேன். ஏன்னா, ஆபரணங்களோட எண்ணிக்கை அதிகம். தவிர பார்வையாளர்களும் நம்மையே பார்த்துட்டு இருப்பாங்க. சின்ன தப்பு செஞ்சாலும் அது பெருசா தெரியும். 

குழுவையும் பாதிக்கும்.ஆனா, ராஜகோபால் சாரும் அவரோட மனைவி ஹானாவும் என்னை உற்சாகப்படுத்தினாங்க. தன்னம்பிக்கையை ஊட்டினாங்க. அதுதான் இந்தளவுக்கு என்னை உயர்த்தியிருக்கு. சின்னச் சின்ன கதைகளும் கூத்துல உண்டு. சில இடங்கள்ல அதை போடுவோம். அந்த வகைல சின்னக் கதைகள்ல பன்னிரெண்டு, பெருசுல எட்டு கதைகளுக்கு கூத்து கட்ட எனக்கு தெரியும். 

அதாவது ஆண், பெண் இரு வேடங்களும் ஏற்று நடிக்க வரும். பெரிய கதைகள் ஒவ்வொன்றும் எட்டு மணிநேரங்கள் நடக்கக் கூடியது. பெரும் பாலும் ராமாயணம், மகாபாரதம், குற்றால குறவஞ்சிலேந்து எடுக்கப்பட்டதாதான் இருக்கும். இதிகாசங்கள்ல வரக் கூடிய சின்னச் சின்ன கதைகளுக்கும் கூத்து கட்டுவோம். அதற்கான நடன அமைப்பு, பாட்டு, வசனம் எல்லாமே ராஜகோபால் சார்தான் எழுதித் தருவார்...’’ என்று சொல்லும் தமிழரசி 2013ல் பயிற்சியாளராக உயர்ந்திருக்கிறார். ‘‘கூத்து கலை ரொம்ப ரொம்ப பாரம்பரியமானது. இதிகாசங்களை கலை வடிவுல அறிமுகப்படுத்தறதுல கூத்துக்கு முக்கியப் பங்குண்டு. இன்னிக்கும் தமிழகத்துல இந்தக் கலைக்கு வரவேற்பு இருக்கு. 

மக்கள் விடிய விடிய பார்க்க தயாரா இருக்காங்க. தமிழகம் தவிர, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் மாதிரி வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகள்லயும் நாங்க ஆடிட்டு வர்றோம். இங்கிலாந்துக்கு போன இரண்டு வார பயணத்தை மறக்க முடியாது. நாங்க ஆறு பேர் போனோம். அதுல நான்கு பேர் பெண்கள். போன வருஷம் சுவிட்சர்லாந்துல தியேட்டர்ல பயிற்சி நடந்தது. மொத்தம் மூன்று மாதங்கள். அதுல நானும் கலந்துகிட்டேன். அங்க கத்துகிட்டதை இப்ப எங்க குருகுல மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கறேன்...’’ என்றவர் யார் வேண்டுமானாலும் கூத்து கற்கலாம் என்கிறார்.

இங்கதான் பரம்பரை பரம்பரையா கூத்து கட்டற வழக்கம் இருக்கு. வெளிநாடுகள்ல அப்படியில்லை. சிறப்பு பயிற்சி எடுத்துக்கற எல்லாருமே அவங்களோட பாரம்பரிய கலைகளை ஆடறாங்க. இப்ப நம்ம நாட்டிலும் அதுபோல மாற்றம் நிகழுது. விருப்பம் இருக்கிற எல்லாருமே இந்தக் கலையை கத்துக்கலாம். எட்டு மணி நேரங்கள் தொடர்ச்சியா ஆடறது அவ்வளவு சுலபமில்லை. அதுக்கு அசாத்தியமான பயிற்சி வேண்டும். ஒருத்தராலயே எட்டு மணி நேரம் ஆட முடியாது. 

அதனால ஒரு சீன்ல நான்கு பேர் வந்தாங்கன்னா அடுத்த காட்சில வேறு சிலர் வருவாங்க. அதனால அயர்ச்சி ஏற்படாது.இரவு முழுக்க கூத்து நடந்தா மறுநாள் பகல் முழுக்க தூங்குவோம். அப்பத்தான் மறுபடியும் இரவுகூத்து கட்ட முடியும். கத்திப் பேசணும், பாடணும். இதனால தொண்டை கட்டிக்க வாய்ப்பிருக்கு. அதனால குரலுக்கான பயிற்சியை முறைப்படி கத்துக்கணும். எங்க குழுவுல எட்டு வயசுலேந்து 20 வயசு வரைக்கும் இருக்காங்க. அதுல 12 பேர் பெண்கள். 20 பேர் ஆண்கள். வருஷம் முழுக்க கூத்து கட்டறோம்னு சொல்ல முடியாது. 

ஆனா, விசேஷ நாட்கள்ல பிசியா இருப்போம். பெரும்பாலும் ஜனவரி முதல் அக்டோபர் வரை கூத்து நடக்கும். பிறகு பனி - மழைக்காலம். அப்ப புதிய கதைகளை உருவாக்குவோம். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் அதுக்கான பயிற்சியை எடுப்போம். பிறகுதான் அரங்கேற்றம்...’’ என்று சொல்லும் தமிழரசிக்கு இறுதி மூச்சு உள்ளவரை கூத்து கட்டும் ஆசை இருக்கிறது. ‘‘ராஜகோபால் சாரும் ஹானாவும் எனக்கு அப்பா, அம்மா மாதிரி. இந்தக் கலையை எனக்கு சொல்லிக் கொடுத்தது இவங்கதான். சின்ன வயசுலேந்து இங்கதான் இருக்கேன். 

கடைசி வரைக்கும் இங்கயே இருக்கணும்னுதான் விரும்பறேன். அப்பா கூட ‘அதான் பயிற்சி முடிஞ்சுடுச்சே... வா’ன்னு கூப்பிட்டார். மறுத்துட்டேன். இந்த குருகுலத்தை பெரிய அளவுக்கு வளர்க்கணும்...’’ சொல்லும்போதே தமிழரசியின் கண்களில் கனவு மிதக்கிறது. 

நம்மாழ்வார்: ஒருஇயற்கைவேளாண்மைமீட்புப்போராளி

முதுபெரும்இயற்கைவேளாண்விஞ்ஞானியானநம்மாழ்வார், கடந்தடிசம்பர் 30 2013அன்றுகாலமாகிவிட்டார். ஏறத்தாழமுப்பதுஆண்டுகளாகஇயற்கைவேளாண்மைக்காகஇடைவிடாமல்போராடிவந்தஅவரதுமறைவுதமிழகமக்களுக்குஈடுசெயமுடியாதபேரிழப்பாகும்.
தஞ்சைமாவட்டம்திருக்காட்டுப்பள்ளியில்பிறந்தநம்மாழ்வார், அண்ணாமலைபல்கலைக்கழகத்தில்வேளாண்மைஇளங்கலைப்பட்டம்பெற்று, கோவில்பட்டிமண்டலமழைப்பயிர்ஆய்வகத்தில்பண்ணைமேலாளராகப்பணியாற்றினார். சிட்டுக்குருவிக்கும்சிற்றெறும்புக்கும்சேர்த்துசமைத்துபல்லுயிர்பேணும்அறத்தைக்கொண்டமரபில்வந்தநம்நாட்டுவிவசாயத்தைப்பசுமைப்புரட்சிஎன்றபெயரால்நாசமாக்கும்அரசின்நடவடிக்கைகளைக்கண்டுஅதிருப்தியுற்று, இயற்கைவழிவேளாண்மைகுறித்தவிழிப்புணர்வைப்பரப்பும்மாபெரும்பணிக்குத்தன்னைஅர்ப்பணித்துக்கொண்டார். பசுமைப்புரட்சியின்போதுஅரசாங்கம்இரசாயனஉரங்களைஊக்குவித்துக்கொண்டிருந்தபோது, அவர்கிராமந்தோறும்விவசாயிகளைநேரில்சந்தித்துஅதன்பாதிப்புகளைஅறிவியல்ரீதியாகஉணர்த்தி, இயற்கைவேளாண்மைகுறித்துவிளக்கினார். ஒற்றைமனிதனாகத்தொடங்கியஅவரதுவாழ்க்கைப்பயணம், இன்றுபலரைஇயற்கைவேளாண்மையின்பக்கம்திருப்பியிருக்கிறது.
நம்நாட்டின்மரபுரிமையாகஉள்ளவேப்பமரத்துக்கானகாப்புரிமையைஅந்நியஏகபோகநிறுவனங்கள்தமக்கானதாகத்திருடிக்கொண்டபோது, அதனைஎதிர்த்துவந்தனாசிவாமுதலானோருடன்இணைந்துபோராடிஅப்பாரம்பரியஉரிமையைஅவர்மீட்டெடுத்தார். பி.டி.கத்தரியைஇந்தியாவில்அறிமுகப்படுத்துவதைஎதிர்த்தஅவர், அன்றையமத்தியசுற்றுச்சூழல்அமைச்சராகஇருந்தஜெய்ராம்ரமேஷ்நடத்தியகருத்துக்கேட்புகூட்டங்களில்தனதுபிரதிநிதிகளைஅனுப்பிபி.டி.க்குஎதிராகப்பேசவைத்தார். அரச்சலூர்செல்வம், சித்தமருத்துவர்சிவராமன்ஆகியோர்அப்போதுதமிழகமுதல்வராகஇருந்தகருணாநிதியிடம்நேரில்சென்றுபி.டி.கத்தரியின்கேடுகளைஎடுத்துச்சோல்லி, தமிழகத்தில்அதற்குத்தடைஉத்தரவுபெற்றதற்குஅவர்முக்கியகாரணமாகஇருந்தார். மேற்குத்தொடர்ச்சிமலைகளில்காடுகள்அழிக்கப்படுவதைஎதிர்த்தஅவர், காடுகள்இல்லையேல்மழையும்ஆறுகளும்இல்லாமல்போய்விவசாயமேபொய்த்துவிடும்என்பதைஉணர்த்திபலபோராட்டங்களில்முன்னின்றார். இயற்கைவிவசாயப்பயிற்றுநர்களைஒடுக்குவதற்காக, கடந்ததி.மு.. ஆட்சியில்கொண்டுவரப்பட்டவேளாண்மன்றச்சட்டத்தைமுறியடித்ததிலும்அவரதுபங்குமுக்கியமானது.
ஜப்பானின்இயற்கைவேளாண்விஞ்ஞானியானமாசானபுஃபுகோகாமற்றும்பெர்னார்ட், ரேச்சல்கார்சன், குமரப்பா, தபோல்கார்முதலானஇயற்கைவேளாண்வித்தகர்களின்மூலம்அறிந்ததொழில்நுட்பத்தையும், தனதுஅனுபவஅறிவினால்உணர்ந்ததையும்அவர்சாமானியவிவசாயிகள்புரிந்துகொள்ளும்மொழியில்விளக்கினார். வெள்ளைத்தாடியுடன்தமிழகஉழவனின்தோற்றத்தில்துண்டுபோர்த்தியவெற்றுடம்புடன்எளிமையாகத்திகழ்ந்தஅவர், காவிரிடெல்டாமாவட்டங்களில்மீத்தேன்வாயுஎடுக்கும்பேரழிவுத்திட்டத்துக்குஎதிராக, கடந்தடிசம்பர்மாதத்தில்கிராமம்கிராமமாகப்பிரச்சாரத்தில்ஈடுபட்டிருந்தபோதேஇயற்கைஎய்தியதுமிகவும்வேதனைக்குரியதாகும்.
பன்னாட்டுஏகபோகநிறுவனங்களின்வேட்டைக்காடாகவிவசாயநிலங்கள்மாற்றப்பட்டு, இரசாயனஉரங்களின்நச்சுக்குவியலாலும்மரபீணிமாற்றப்பயிர்கள்எனும்இயற்கைஅழிப்புத்திட்டங்களாலும்பாழ்பட்டுள்ளதமிழகவிவசாயத்தை, அந்தஅழிவிலிருந்துகாப்பாற்றஅவர்பலகிராமங்களுக்குச்சென்றுவிவசாயிகளைச்சந்தித்துகருத்தரங்குகளும், பயிற்சிவகுப்புகளும்நடத்திஇயற்கைவேளாண்மைமுறைகளைமீட்டெடுத்தார். இரசாயனஉரத்துக்குமாற்றாக, பயிர்சுழற்சிவேளாண்மைமுறையின்மூலம்அதைஈடுசெய்யமுடியுமென்பதைஅவர்அறிவியல்ரீதியாகச்செயல்படுத்திக்காட்டினார். கேடுவிளைவிக்கும்மரபீணிமாற்றப்பயிர்களைஎதிர்த்தஅவர், பாரம்பரியஒட்டுரகங்களைஉருவாக்கினார்.
உழவுக்கும்உண்டுவரலாறு, தாய்மண்ணேவணக்கம், பூமித்தாயே, எந்நாடுடையஇயற்கையேபோற்றி, இனிவிதைகளேபேராயுதம், வயிற்றுக்குச்சோறிடவேண்டும், நோயினைக்கொண்டாடுவோம்என 15-க்கும்மேற்பட்டநூல்களைப்படைத்துள்ளஅவர், அதிகமகசூலால்பிரபலமானமடகாஸ்கரின்ஒற்றைநாற்றுநடவுஅல்லதுசெம்மைநெல்சாகுபடியைஉலகுக்கேஅறிமுகப்படுத்தியதுதமிழர்கள்தான்என்றஉண்மையைஆதாரங்களுடன்எடுத்துரைத்தார். ஏகாதிபத்தியவாதிகளால்திணிக்கப்படும்துரிதஉணவினால்ஏற்படும்கேடுகளைவிளக்கி, நமதுபாரம்பரியஉணவுதானியங்களின்மகத்துவத்தைஉணர்த்தியதோடு, அதிகவிலையுள்ளஆப்பிளைவாங்கிச்சாப்பிடுவதைப்பெருமையாகக்கருதும்நம்நாட்டில், அதைவிடஅதிகச்சத்துக்களைக்கொண்டகொயாப்பழம்மலிவுவிலையில்கிடைப்பதைவிளக்கித்தொடர்ந்துபிரச்சாரம்செய்துவந்தார்.
இன்றுநாசமாக்கப்படுவதுவிவசாயமும்விவசாயிகளும்மட்டுமல்ல; சிறப்புப்பொருளாதாரமண்டலங்கள், நச்சுஆலைகள், இயற்கைமூலவளங்கள்கொள்ளையிடப்படுதல், சிறுதொழில்களும்சில்லறைவணிகமும்நசுக்கப்படுதல்எனநாடும்மக்களும்கேள்விமுறையின்றிச்சூறையாடப்படுகின்றனர். இத்தகையபேரழிவுக்குக்காரணமாகஇருப்பதுஏகாதிபத்தியமறுகாலனியாதிக்கக்கொள்கைகள். நாட்டையும்மக்களையும்சூறையாடும்மறுகாலனியாதிக்கத்தைப்போராடிமுறியடிக்கஅரசியல்கிளர்ச்சிகளும்அரசியல்புரட்சிகளும்இன்றுஉடனடித்தேவையாகியிருக்கிறது.
ஆனால்நம்மாழ்வார், விவசாயத்தில்மறுகாலனியாக்கத்தின்கொடியவிளைவுகளைமட்டும்எதிர்த்தாரேதவிர, இதற்குக்காரணமாகஉள்ளஅரசியல்கட்டமைப்பைஎதிர்க்கத்துணியவில்லை. இயற்கைவேளாண்மையைமீட்டெடுப்பதன்மூலம்ஏகாதிபத்தியங்களால்திணிக்கப்படும்நாசகாரக்கொள்கைகளைமுடமாக்கிவிடமுடியும்என்றுநம்பினார். அவர்எவற்றையெல்லாம்எதிர்த்துப்போராடினாரோ, அவற்றைத்திணித்தஅரசியல்கட்டமைப்பைஎதிர்த்துநிற்காமல், அந்தக்கட்டமைப்பில்உள்ளவர்களுடனும், தன்னார்வக்குழுக்களுடனும்இணைந்துசெயல்பட்டார். சாமானியமக்களைஅரசியலுக்குஅப்பாற்பட்டுஒன்றுசேர்க்கும்களமாகவேதன்னார்வத்தொண்டுநிறுவனங்களைப்பார்த்தார். ஏகாதிபத்தியங்களின்மறுகாலனியாக்கத்தால்விவசாயமும்விவசாயிகளும்நாசமாக்கப்பட்டுவரும்சூழலில், அரசியல்பார்வையின்றியாரெல்லாம்இயற்கைவேளாண்மைக்குஆதரவாகநிற்கிறார்களோஅவர்களுடனெல்லாம்இணைந்துநின்றார். ஏகாதிபத்தியங்களைப்புரவலர்களாகக்கொண்டதன்னார்வக்குழுக்கள்முதல்இந்துவெறியர்களின்சுதேசிஜக்ரான்மஞ்ச்வரைஅனைவருடனும்இணைந்துபோராட்டங்களில்பங்கேற்றார். இத்தகையபலவீனங்கள்அவரிடமிருந்தபோதிலும், ஏகாதிபத்தியங்களால்திணிக்கப்படும்நாசகரவிவசாயக்கொள்கைகளுக்குஎதிராகமக்களிடம்விழிப்புணர்வூட்டிஇயற்கைவழிவேளாண்மையைமீட்டெடுக்கஇடையறாதுபோராடியமகத்தானஇயற்கைவேளாண்விஞ்ஞானியாவார்.

மறுகாலனியாதிக்கச்சூறையாடலுக்குவிசுவாசமாகநிற்கும்எதிரிகளுடனும், ஏகாதிபத்தியக்கைக்கூலிகளானதன்னார்வக்குழுக்களுடனும்இணைந்துபோராடுவதன்மூலம்சுற்றுச்சூழல்பாதுகாப்பு, இயற்கைவழிவேளாண்மைப்பாதுகாப்புமுதலானவற்றைஒருக்காலும்மீட்டெடுக்கமுடியாதுஎன்பதைஅவரதுஆதரவாளர்கள்உணர்ந்து, மறுகாலனியாதிக்கத்துக்குஎதிராகஇதரபிரிவுஉழைக்கும்மக்களுடன்இணைந்துபோராடுவதன்மூலம்அவர்கண்டகனவைநனவாக்கமுன்வரவேண்டும்.

கீழடி: தமிழர் நாகரிக வரலாற்றின் உயிர் நாடி

அகழாய்வு செய்வதற்கு கீழடி என்ற கிராமத்தை ஏன் தேர்வு செய்தார்கள்? அதன் பின்னணி என்ன?
மத்திய தொல்லியல் துறையினர் 2013-14ஆம் ஆண்டுகளில் வைகை நதிப் படுகையில் உருவான
நாகரிகத்தைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு விரிவான கள ஆய்வை நடத்தினர். வைகை நதி துவங்கும்
இடத்திலிருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை நதியின் இரண்டு பக்கமும் மூன்று கிலோ மீட்டர்
தொலைவு வரை உள்ள அனைத்துக் கிராமங்களையும் அவர்கள் தொல்லியல் ஆய்வு செய்தனர். அதில்
சுமார் 293 கிராமங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்களாக அக்குழுவினரால்
கண்டறியப்பட்டுள்ளன. அந்த 293 கிராமங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடயங்களும்
தொல்லியல் எச்சங்களும் மிக அதிகமாக அடையாளங்காணப்பட்ட கிராமம் கீழடி. இது மதுரையிலிருந்து
15 கிலோ மீட்டர் தூரத்தில், சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கும் கீழடி ஆய்விற்கும்
உள்ள அடிப்படையான வேறுபாடு என்ன?
தமிழகத்தில், மாநில தொல்லியல் துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்று
வருகின்றன. ஆனால் அவற்றின் அளவு மிகச்சிறியது. மாநில அரசு, தொல்லியல் துறைக்கு ஒதுக்கும் நிதி
மிகச் சொற்பமே.
கேரளாவில் அம்மாநில தொல்லியல் துறையின் சார்பில் பட்டணம் எனும் இடத்தில் (சங்க கால முசிறி)
தொடர்ந்து 15 ஆண்டுகள் அகழாய்வு நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படிப்பட்ட முயற்சிகள்
நடப்பதாகத் தெரியவில்லை.
கீழடியில் அகழாய்வை மேற்கொள்வது மத்திய தொல்லியல் துறை. 1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய
தொல்லியல் துறையின் சார்பில் மிக விரிவாக நடைபெறும் அகழாய்வு இதுதான்.
கீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன?
சங்க காலத் தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை
கண்டறியப்படவில்லை. முதன்முறையாக ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான முழுமையான
அடையாளங்கள் கீழடியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வளர்ச்சி
பெற்ற முழுமையான ஒரு நகரம் இப்போது இங்கு கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு தமிழக
வரலாற்றுக் காலத்தை புதிய மறுபரிசீலனையை நோக்கி நகர்த்துகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தின்
இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் அறிவியல் பூர்வமான ஒளிபாய்ச்சும் இடமாக கீழடி இருக்கிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்குழு சமூகமாகத்தான்
வரையறுத்தார்கள். சிந்துவெளி நாகரிகத்தைப் போல, ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள்
கருத்தின் அடிப்படை. இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ள
முடியாது. எனவே கடந்த இலக்கியத்தைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அவர்களது
கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால், இன்று கீழடியில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் அந்தக் கருத்தியலை
தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கின்றன.
நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்திய வரலாற்றுப் பேரவையின் (ஐசிஎச்ஆர்) மாநாடு
இருவாரங்களுக்கு முன் ( 2016 டிச.29,30 தேதிகளில்) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் கீழடி
கண்டுபிடிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்த அமர்வுக்கு தலைமை வகித்த வரலாற்று அறிஞர்

பேராசிரியர் ரொமிலா தாப்பர், “தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவை.
இக்கண்டுபிடிப்புகளின் மூலம் தமிழக வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம்
இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
கண்டறியப்பட்டுள்ள அந்த நகரத்திற்கு கீழடி என்றுதான் பெயரா?
வரலாற்றில் இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒன்று, ஹோமர் எழுதிய இலக்கியத்தில் “டிராய்”
என்ற பெயர் இருப்பதன் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த நகரத்தை பூமியின் அடியில்
ஆய்வு செய்து கண்டுபிடித்தார்கள். இது ஒரு வகை என்றால், இன்னொரு வகையாக இந்தியாவில் ஹரப்பா-
மொகஞ்சதாரோவை குறிப்பிடலாம். அங்கு கண்டறியப்பட்ட நகரத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்தது
என்று யாருக்கும் தெரியாது. கண்டறியப்பட்ட இடத்தில் இருக்கும் கிராமங்களின் பெயர்தான் ஹரப்பா-
மொகஞ்சதாரோ.
இப்போது கீழடியில் கண்டறியப்பட்டுள்ள நகரத்தின் பெயர் என்னவென்று தெரியாது, இப்போது இருக்கும்
அந்த கிராமத்தின் பெயர் கீழடி என்பதால், அந்தப் பெயரிலேயே அழைக்கிறோம். ஆனால், சங்க கால
இலக்கியங்களில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில், இது பழைய மதுரையாக இருப்பதற்கான
வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், சங்க இலக்கியத்தில் மதுரை என்பது திருப்புவனத்திற்கு நேர்
மேற்கிலும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கிலும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய
மதுரையோ திருப்பரங்குன்றத்திற்கு வடகிழக்கிலும் திருப்புவனத்திற்கு வடமேற்கிலும் இருக்கிறது.
ஆனால், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள நகரமானது சங்க இலக்கியத்தில் வருகிற நிலவியல்
குறிப்பின் படி மிகத் துல்லியமான இடத்தில் அமைந்துள்ள நகரமாக இருக்கிறது. எனவே இதுவே சங்க கால
மதுரையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நகர நாகரிகம் என்று எதன் அடிப்படையில் தொல்லியல்
ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்?
ஒரு நகரத்தினுடைய முழுமையான கட்டமைப்பு அங்கு கண்டறியப்பட்டுள்ளது. வரிசை வரிசையாக
கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; அந்த தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளிச்
செல்லவுமான அமைப்புகள்; அந்தக் கால்வாய் தடத்தை ஒட்டி சிறிதும் பெரிதுமான ஆறு உலைகள்;
கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண்
குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள்.
இவைகளெல்லாம் முதன்முறையாக கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடுவதற்கு தமிழ்நாட்டிலோ அல்லது
தென்னிந்தியாவிலோ வேறு இடங்களே இல்லை.
மேலும் ஆப்கானிஸ்தானப் பகுதியைச் சேர்ந்த சூது பவளத்தினால் ஆன மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த
மட்பாண்டங்களும் ,வட இந்திய பிராகிருத பெயர்கள் தாங்கிய எழுத்துக்களும் கிடைத்துள்ளன. பானை
ஓடுகளில் இதுவரை 73 பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல, ஒரு தொழிலகம் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய
தக்கையில் துவங்கி எண்ணற்ற தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மொத்தத்தில், வணிகமும் பண்பாடும் ஊடறுத்துக் கிடக்கும் பெருநகரமாக இது இருந்துள்ளது. கீழடியில்
கண்டறியப்பட்ட சுமார் 5000க்கும் மேற்பட்ட பொருட்களை முழுமையாக பட்டியலிட முடியாது என்றாலும்,

வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சிறந்த சான்றுகளை நம்மால் அங்கே காண
முடிகிறது.
இங்கு கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தீர்களே, அது எந்த நிலையில்
இருக்கிறது?
மத்திய தொல்லியல் துறையின் கீழ் இந்தியாவில் 44 கள அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அதில்
இருப்பது ஒன்றே ஒன்று மட்டும்தான். அது சென்னை கோட்டைக்குள் (தலைமைச் செயலகம்) இருக்கிறது.
வேறு எங்கும் அருங்காட்சியகம் அமைக்கவில்லை. இந்நிலையில், கீழடியில் கண்டறியப்பட்ட
பொருட்களை, கள அருங்காட்சியகம் அமைத்து, மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று
வலியுறுத்தினோம். இதன் தொடர்ச்சியாக சிலர் நீதிமன்றத்தையும் அணுகினர். கள அருங்காட்சியகம்
அமைக்க நிலம் தர வேண்டியது மாநில அரசு. நமது கோரிக்கைகளை ஏற்று, அதற்கான நிலத்தை
ஒதுக்கித்தர மாநில அரசு முன்வந்துள்ளது. அதை வரவேற்கிறோம்.
கீழடி அகழாய்வுப் பணிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை என்ன?
கீழடியில் இரண்டு ஆண்டுகள் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான
அனுமதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கான எந்த காரணத்தையும் அரசு
தெரிவிக்கவில்லை.
குஜராத்தில் உள்ள தொழவீராவில் 13 ஆண்டுகள் அகழாய்வு செய்தவர்கள். ஆந்திராவில் உள்ள
நாகார்ஜூன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்தவர்கள், அகிசித்ராவில் 6 ஆண்டுகளும்,
குஜராத்தில் உள்ள லோத்தலில் 5 ஆண்டுகளும் அகழாய்வு செய்தவர்கள், கீழடி ஆராய்ச்சியை மட்டும்
இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வருவதின் பின்னணி என்ன என்பது தான் நமது கேள்வி.
கீழடியில் இருக்கிற தொல்லியல்மேடு 110 ஏக்கர். இதில் கடந்த 2 ஆண்டுகளாக அகழாய்வு நடந்துள்ள
பரப்பளவு வெறும் 50 செண்ட் மட்டும்தான். அதாவது ஒரு சதவீத நிலப்பரப்பு கூட ஆய்வுக்கு
உட்படுத்தப்படவில்லை. இந்நிலையில்தான், அதை நிறுத்தி வைப்பது என்ற முடிவை மத்திய அரசு
எடுத்துள்ளது.
அகழாய்வில் கிடைக்கும் கரிமூலப்பொருட்களின் மாதிரியை வேதிப்பொருள் ஆய்வகங்களுக்கு அனுப்பி
“கார்பன் – 14 பகுப்பாய்வு எனும் முறையில் ஆய்வு செய்து, அப்பொருளின் காலத்தை நிர்ணயிக்கின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலைசிஸ் ஆய்வு நிறுவனத்திற்கு இவை
அனுப்பப்படுகின்றன.
அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14
பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறை முடிவு செய்கிறது.
இராஜஸ்தானில் உள்ளகாளிபங்கனில் நடத்தப்பட்ட அகழாய்வில் 28 பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு
அனுப்பிவைத்துள்ளனர். தொழவீராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி
வைத்துள்ளனர். கிரிசராவில் இருந்து 15 பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் இரண்டே இரண்டை மட்டும்தான்
கார்பன் – 14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. குறைந்தபட்சம்
10 பொருட்களின் மாதிரியையாவது ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்பது தொல்லியலாளர்களின் கருத்து.

இரும்புக்காலம் துவங்கி, வரலாற்றுக் காலம் வரை தொடர்ச்சியான ஆதாரங்கள் கிடைக்கும் இடம் கீழடி.
எனவே இந்த ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக நிறுவ இவ்வாய்வு மிக முக்கியமானது.
கீழடியில் அகழாய்வை தொடர அனுமதி மறுப்பதும் அகழாய்வில் கண்டறியப்பட்டபொருட்களை ஆய்வுக்கு
அனுப்ப மறுப்பதுமான செயல் மத்திய தொல்லியல் துறையின் அப்பட்டமான பாரபட்சமே.
இந்தப் பிரச்சனையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய கலாச்சார துறை அமைச்சருக்கு
கடிதம் எழுதி, அதற்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?
எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது. அவரது கடிதத்திற்கு மத்திய கலாச்சார துறை
அமைச்சர் ‘கீழடி அகழாய்வு பற்றி அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை வந்த பின், அகழாய்வைத்
தொடர்வது பற்றி முடிவு செய்வோம்’ என்று பதில் அளித்துள்ளார். இதே பதிலைத்தான் தொல்லியல்
துறையின் தலைமை இயக்குநரும் பிற ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இந்த பதிலின் மூலம் தான்
இவர்களின் உண்மை முகம் வெளிவரத்துவங்கியுள்ளது.
கீழடியோடு அகழாய்வு துவக்கப்பட்ட இடங்கள் வாட் நகர் மற்றும் பிஞ்ஜோர். வாட்நகர், பிரதமர்
மோடியின் சொந்த ஊராகும். குஜராத்தில் உள்ளது. பிஞ்ஜோர், இராஜஸ்தானில் உள்ளது.
இந்த இரண்டு இடங்களிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகழாய்வு நடந்து முடிந்துள்ளது. 2017ஆம்
ஆண்டுக்கான துவக்க நிகழ்ச்சி வாட் நகரில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதியே கொண்டாடப்பட்டுவிட்டது.
பிஞ்ஜோரில் ஜனவரி 1 ஆம் தேதி துவக்க விழா நடந்துள்ளது- இங்கெல்லாம் இவர்கள் அறிக்கையைப்
பெற்றுத்தான் அடுத்த ஆண்டிற்கான அனுமதியை வழங்கினார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
2005 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஆதிச்சநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்) அகழாய்வு முடிவுகள் மற்றும்
அறிக்கை தற்போது வரை வெளிவரவில்லை. அந்த அறிக்கையைப் பெற்று வெளியிட வேண்டும் என்று
தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அகழாய்வு முடிந்து பத்து ஆண்டுகளுக்குப்
பிறகும் அறிக்கையை வெளியிட முயற்சி செய்யாத தொல்லியல் துறை, அகழாய்வு நடந்து கொண்டிருக்கும்
இடத்தில் அறிக்கையைக் கேட்டு அகழாய்வை நிறுத்துகிறது. இவை இரண்டுக்கும் இருப்பது ஒற்றை
நோக்கம்தான்.
கீழடி அகழாய்வு தொடர இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?
கீழடியின் முக்கியத்துவம் அனைத்து வகையிலும் உணரப்பட வேண்டும். அடையாளங்களை அழிப்பதையும்
மறைப்பதையும் வெளிப்படையாகச் செய்யும் இந்துத்துவா அரசியலின் பார்வையில் இப்போது கீழடி
சிக்கிக் கொண்டிருக்கிறது. இங்கு கிடைத்துள்ள 5000க்கும் மேற்பட்ட பொருட்களில் மதஅடையாளம்
சார்ந்த பொருட்கள் என்று எதையும் சொல்லமுடியாது. பெரு மதங்கள் உருவாவதற்கு முன்பே சிறந்து
விளங்கிய ஒரு நாகரிகத்தின் அடையாளம்தான் கீழடி.
மொழியியல் அறிஞர் கால்டுவெல், தமிழ் மொழியின் சிறப்பை பற்றி கூறுகிறபோது, இது ஒரு
சமயச்சார்பற்ற மொழி என்று மதிப்பீடு செய்தார். இந்த மதிப்பீட்டிற்கும் கீழடி நாகரிகத்திற்கும் இருக்கிற
ஒற்றுமையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தேசிய இனங்களின் தனித்துவமான பண்பாட்டின் மீதும் வரலாற்றின் மீதும் ஒரு கொடுந்தாக்குதல்
அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் கீழடியில் கிடைத்துள்ள நாகரிகத்தின் எச்சங்களை
பாதுகாப்பதும் அங்கு அகழாய்வை முன்னெடுப்பதும் தமிழ்ச் சமூகத்தின் அர்த்தமிக்க வாழ்வியல்
வரலாற்றுச் சாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.

இங்கு கிடைத்துள்ளவற்றைப் பற்றிய கருத்துக்களையும் விவாதங்களையும் தொல்லியல் அறிஞர்கள்
முன்னெடுக்கட்டும். ஆனால் , அகழாய்வை அனுமதிக்க மாட்டோம் என்ற முடிவு அரசியல் ரீதியானது.
அதனை அரசியல் களத்தில் தான் சந்தித்தாக வேண்டும். தமிழகத்தின் அரசியல் கட்சிகள் இதுகுறித்து தீவிர
வினையாற்றவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அரசின் வஞ்சனையை
கண்டித்தும், தமிழ்ச் சமூகத்தின் நாகரிக வரலாற்றை முழுமையாக வெளிக் கொண்டு வரும் விதமாக கீழடி
அகழாய்வை முழுமையாகத் தொடர வேண்டும் என்றும் சமீபத்திய அறிக்கையில் வலியுறுத்தி இருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி தமுஎகச எடுத்துள்ள முயற்சிகள் பற்றி…
இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறிய கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற மத்திய அரசு,
விஞ்ஞானப் பூர்வமான ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட கீழடியில் ஆய்வைத் தொடர அனுமதி
மறுக்கிறது.
அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ. 151 கோடியை ஒதுக்கியுள்ள இந்த அரசு தான்
கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ரூ. 1 லட்சத்தை
ஒதுக்கியுள்ளது.
இந்த அப்பட்டமான வரலாற்றுத் துரோகத்திற்கு எதிராக தமிழகத்தின் அரசியல் கட்சிகளும்,
அறிவுத்துறையினரும், ஊடகவியலாளர்களும் ஒன்று திரள வேண்டும். இதற்காக மதுரையில் ஜன.22 ஆம்
தேதியும் சென்னையில் ஜன.24ஆம் தேதியும் நடத்த கண்டன இயக்கங்களை தமுஎகச திட்டமிட்டுள்ளது.
இதில் அனைவரையும் பங்கெடுக்க அழைக்கின்றோம்.
இவ்விஷயத்தில் மாநில அரசு வலிமை மிக்க தலையீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக எம்.பிக்கள்
நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
கீழடியின் மேல் விழும் அடி நமது பண்பாட்டின் மீதும் வரலாற்றின் மீதும் ஜனநாயக மரபுகளின்அகழாய்வு செய்வதற்கு கீழடி என்ற கிராமத்தை ஏன் தேர்வு செய்தார்கள்? அதன் பின்னணி என்ன?

அறிவுத்துறையினரும், ஊடகவியலாளர்களும் ஒன்று திரள வேண்டும்.

Sunday, 18 March 2018

காவிரி கடந்து வந்த பாதை

காவிரி பிரச்சினை எப்படி ஏற்பட்டது , என்னதான் நடந்தது ஒரு சுருக்கமான நினைவூட்டல் வரலாறு
முதல் உடன்படிக்கை 1892,1924
1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது.
1924 அங்கே மைசூர் - கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது.
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர் பகிர்வு நடந்துவந்தது.
1956-ல் மொழிவழி மாநில மறு சீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று.
1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது.
1960-ல் கபினி நீரில் பங்கு கேட்டு குதித்த கேரளா
கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது.
அதிக பாசனப் பரப்பு கொண்ட தமிழகம்
1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி நீர்ப்பாசனப் பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பகுதி 6.80 லட்சம் ஏக்கர் என்றும் தெரியவந்தது.
இருபுறமும் நீர்ப்பாசனப் பகுதி குறித்த சர்ச்சைகளின் ஆரம்பமே காவிரிப் பிரச்சினையின் முதல் பிரச்சினைக்கு வித்திட்டது. தமிழகம் தனது 25.8 லட்ச ஏக்கர் நிலப்பரப்பை சுருக்க விரும்பாததும், கர்நாடக தனது 6.8 லட்ச ஏக்கர் நீர்ப்பாசனப் பகுதியை அதிகரிக்க நினைத்ததும் பிரச்சினைக்கு காரணமாகின.
உச்ச நீதிமன்ற வழக்கு
1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்தது, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதால் தமிழகம் வழக்கை திரும்பப் பெற்றது.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான பகுதி 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பிரச்சினைகளுக்கான சட்டம், 1956 என்பது தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது.
தீர்ப்பாய கோரிக்கையை வைத்த எம்ஜிஆர், அமைத்துக்கொடுத்த வி.பி.சிங்
பல கட்சிகள் தலைமை தாங்கிய தேசிய முன்னணி ஆட்சியில்தான் காவிரி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. 1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.
தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு கர்நாடக 465 டிஎம்சி, தமிழகம் 566 டிஎம்சி, கேரளா 99.8 டிஎம்சி, புதுவை 9.3 டிஎம்சி.
தீர்ப்பாயத்திடம் நியாயம் கிடைக்காததால் உச்ச நீதிமன்றம் போன தமிழக அரசு
தங்களுக்கான தண்ணீரைத் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறு பரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பும், கர்நாடகாவின் அவசரச் சட்டமும்
1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு.
மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவும் வரையறுக்கப்பட்டது.
கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது.
இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.
1991 வன்முறை
தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும், கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன.
1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.
தோல்வியில் முடிந்த காவிரி ஆற்று ஆணையம்
1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை.
தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு
2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கி உத்தரவிட்டது.
205 டிஎம்சி 192 டிஎம்சியாக குறைக்கப்பட்ட கதை
தமிழகத்துக்கு உரிய பங்கான 419 டிஎம்சியில் தமிழ்நாட்டுக்குள் பொழியும் மழை அளவில் கிடைத்தது போக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவுதான் 192 டிஎம்சி.
கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது.
இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு பின்வருமாறு :
ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5.
ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறை காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக இன்றுவரை எதிர்த்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசின் நழுவல்
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை நாடாளுமன்றத்தில் வைத்து அதன் பின்னே நிறைவேற்றுவோம் என்று தமிழகத்துக்கு பாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததால் இன்றுவரை காவிரிப் பிரச்சினையில் தீர்வு காணப்பட்டவில்லை.
டிஎம்சி அளவு குறைப்பு
முதலில் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த மறுத்து உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் தீர்ப்பாயம் மூலம் 192 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. பின்னர் அதுவும் இன்றைய தீர்ப்பில் 177 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலத்தடி நீரை முதன்முறையாக கணக்கில் எடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை தமிழக விவசாயிகள் எதிர்க்கிறார்கள்.
10 லட்சம் ஏக்கர் பாசனத்தை இழந்தோம்

தமிழகத்தின் பாசனப்பகுதி தொடர்ச்சியான காவிரி பிரச்சனை காரணமாக 15 லட்சமாக குறைந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகமும் இந்தியாவில்தான் உள்ளது. தமிழக உற்பத்தியும் இந்தியாவின் உற்பத்திதான் என்பதை அரசியல் தாண்டி உணர வேண்டும்.