முகத்தில் வண்ணங்கள் பூசி, காலில் சலங்கை கட்டி, உரத்த குரலில் கூத்து கட்டுவது இப்போதும் சில கிராமங்களில் அபூர்வமாக இருக்கிறது. கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இந்தக் கலை இருக்கிறது என்பதுதான் சோகம். இந்நிலையில் தனது கணீர் குரலாலும், திறமையான நடிப்பாலும் இக்கலைக்கு உயிர் கொடுத்து வருகிறார் தமிழரசி. இத்தனைக்கும் இவருக்கு வயது 21தான்.
‘‘சொந்த ஊர், பெருகட்டூர் கிராமம். காஞ்சிபுரத்துலேந்து 25 கி.மீ. தொலைவுல இருக்கு. அப்பா, நிலத்தரகர். அம்மா, இல்லத்தரசி. ஒரு அண்ணன், இரண்டு அக்கான்னு கூட பிறந்தவங்க மூன்று பேர். அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு. நான் கடைக்குட்டி. 8 வயசுல கட்டைக்குட்டு குருகுலத்துல சேர்ந்தேன். பள்ளிப் படிப்பையும் முடிச்சேன். கூத்தும் கத்துகிட்டேன். ப்ளஸ் 2ல நல்ல மார்க் வாங்கியிருக்கேன். டிகிரி முடிக்கணும். ஆனா, கூத்துக்கே நேரம் சரியா இருக்கு. இருந்தாலும் எப்படியாவது தபால் மூலமா படிச்சு டிகிரி வாங்கிடுவேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் தமிழரசி.
‘‘கட்டைக்குட்டு குருகுலத்தை நிறுவியவர், ராஜகோபால். அப்பாவோட நண்பர். அவங்களோட குடும்பக் கலையே இதுதான். தாத்தா, அப்பான்னு வழி வழியா கூத்து கட்டிருக்காங்க. அதனால ராஜகோபால் சாருக்கும் இயல்பிலேயே கூத்து மேல ஆசை வந்திருக்கு. தன்னோட 10 வயசுலேந்து கூத்து கட்ட ஆரம்பிச்சிருக்காரு.பெண்களை முதன் முதல்ல கூத்து கட்ட வைச்சது இவர்தான்னு சொல்லலாம். சொந்தமா கதை, வசனம், பாடல் எல்லாம் எழுதி இயக்குவார். 1990ம் வருஷத்துல ‘கட்டைக்குட்டு சங்கம்’ அப்படீங்கிற பட்டறையை தொடங்கினாரு.
அதுவே 2002ல ‘கட்டைக்குட்டு குருகுலமா’ மாறிச்சு. இந்த குருகுலத்தோட விசேஷம் என்னன்னா பள்ளிப் படிப்பையும் கூத்தையும் சமமா சொல்லித் தருவாங்க. அப்ப எனக்கு எட்டு வயசு. அரசு மேல்நிலைப் பள்ளில படிச்சுட்டு இருந்தேன். அப்பாவை சந்தித்து, இது மாதிரி ஒரு பள்ளி தொடங்கியிருக்கறதாவும் கூத்துக் கலையும் கற்று கொடுப்பதாவும் ராஜகோபால் சார் சொன்னார். படிப்பு தவிர ஒரு கலையும் கத்துக்கறது நல்லதுன்னு நினைச்ச எங்கப்பா, 2003ல என்னை இங்க சேர்த்தாரு. புது இடம், புதிய ஆட்கள். குருகுலம் என்பதால் வீட்டுக்கும் போக முடியாது. ஆரம்பத்துல மிரட்சியா இருந்தது. ஆனா, என் வயசு பசங்க அங்க இருந்ததால சீக்கிரமே குருகுலத்துக்கு தகுந்தா மாதிரி என்னை மாத்திகிட்டேன்.
இங்க வந்து 13 வருஷங்கள் ஆகிடுச்சு. இவ்வளவு காலம் எப்படி போச்சுன்னே தெரியலை. ஸ்டூடன்டா இருந்த நான் இப்ப பயிற்சியாளரா இருக்கேன்.காலை 7:30க்கு ஸ்கூல் தொடங்கும். அதனால அதுக்கு முன்னாடியே எழுந்து எல்லா வேலைகளையும் முடிச்சுடுவோம். மதியம் ஒரு மணி வரை அந்தந்த வகுப்புக்கான பாடங்கள் நடக்கும். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூத்து பயிற்சி தொடங்கும். பாடறது, ஆடறது, வசனம் பேசறது, நடிக்கறதுன்னு ஒவ்வொரு பயிற்சியா நடக்கும்.
‘கட்டை’ன்னா மரக்கட்டை. ‘குட்டு’ என்பது கூத்தை குறிக்கிற சொல். அதனாலதான் குருகுலத்துக்கு இந்த பேரு. எங்களுடையது கூத்தோட ஒரு வகை.அதாவது, பாரம்பரிய கூத்து சாலைல நடக்கும். நாங்க பெரிய மைதானத்துல மேடை போட்டு அரங்கேற்றுவோம். அதே மாதிரி பாரம்பரிய கூத்துல ஆண்களேதான் பெண் வேஷமும் போடுவாங்க. இங்க அப்படியில்லை. பெண்களே சலங்கை கட்டி பெண் வேடம் ஏற்பாங்க. அதுமட்டுமில்ல ஆண் வேஷத்தையும் பெண்களேதான் போடுவாங்க!
பாடல், வசனம், நடனம், மேக்கப், ஆபரணம்னு எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். தொடக்கத்துல ஒரு பாட்டுக்கு எப்படி கூத்து கட்டறதுன்னு சொல்லிக் கொடுப்போம். அதுக்கான நடன அமைப்பு, முகபாவனைன்னு எல்லாமே. அப்புறம் வசன பயிற்சி. இதுக்கு பிறகுதான் முழு நாடகத்துக்கான பயிற்சி.ஒரு கதை எட்டு மணி நேரம் வரைக்கும் போகும். இடைவேளை எல்லாம் கிடையாது. அதாவது, இரவு பத்து மணிக்கு கூத்து ஆரம்பிச்சா, மறுநாள் காலை ஆறு மணிக்குதான் முடியும். இப்படி விடிய விடிய நடக்கறதை மக்களும் சலிக்காம பார்ப்பாங்க.
ஏற்கனவே சொன்னா மாதிரி ஆண் வேஷத்தையும் பெண்களேதான் போடுவோம். அதனால எல்லாருக்குமே இரு வேடத்துக்கான பயிற்சியை அளிப்போம். இதனால எல்லாருக்கும் எல்லா கதாபாத்திரமும் தெரியும்.கூத்தை பொறுத்தவரைக்கும் அடவுதான் முக்கியம். அதாவது, டான்ஸ் ஸ்டெப்ஸ். இதுல மொத்தம் எட்டு அடவுகள் இருக்கு. பரதம் மாதிரி முத்திரைகள் இருக்காது. ஆனா, கதகளி மாதிரி சில அசைவுகள் இருக்கும். அதுக்காக இதை கதகளின்னும் சொல்லிட முடியாது.
எட்டு வயசுல பயிற்சி ஆரம்பிச்சது. ஒன்பது வயசுல மேடை ஏறினேன். ‘வில் வளைப்பு திரவுபதி’ நான் ஆடிய முதல் கூத்து. இதுல திரவுபதிக்கு தோழியா நடிச்சேன். மூணு வருஷம் இது மாதிரி சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்தான். அதுக்கு பிறகுதான் திரவுபதி, அர்ச்சுனன், அபிமன்யுன்னு முக்கிய கதாபாத்திரங்கள் செய்ய ஆரம்பிச்சேன்...’’ என்று சொல்லும் தமிழரசிக்கு பிடித்தது திரவுபதி வேடமாம்.‘‘அந்த கம்பீரத்துக்கு நான் அடிமை. துரியோதனன் கிட்ட கோபத்தோட பேசறப்ப அந்த கேரக்டராவே மாறிடுவேன்.
முதன் முதல்ல அந்த கதாபாத்திரத்துக்கு என்னை தேர்ந்தெடுத்தப்ப பல நாட்கள் இரவு தூங்காம பயிற்சி எடுத்தேன். அதே போல அபிமன்யு என்னை பாதித்த கேரக்டர்னு சொல்லலாம். சின்ன வயசுல அந்த பிஞ்சு மனசுல இருந்த தைரியம் எப்பவும் என்னை நெகிழ வைக்குது...’’ என்று சிரித்தவர், கூத்துக்கான ஆரம்ப கட்டங்களை குறித்து சிலாகிக்கத் தொடங்கினார். ‘‘ஆபரணங்களை நாங்களேதான் வடிவமைப்போம். கிரீடம், தோள் பட்டை, கழுத்து... இப்படி ஆபரணம் இல்லாம நடனமாட மாட்டோம். இதையெல்லாம் கல்யாண மரக் கட்டைல செய்து, வண்ணம் தீட்டி, கண்ணாடி பதிச்சு, கலர் கலர் பேப்பர்களை ஒட்டித்தான் உருவாக்குவோம்.
மரக்கட்டைங்க அதிக எடை இருக்காது. ஆனாலும் எல்லா ஆபரணங்களையும் அணிந்து நடனமாடறது சுலபமில்லை. நிறைய பயிற்சி எடுக்கணும். முதன் முதல்ல கிரீடம் அணிஞ்சு நான் நடனமாடினப்ப கஷ்டப்படலை. வேகமா ஆடினேன். அதைப் பார்த்துட்டுத்தான் ராஜகோபால் சார் என்னால பெரிய கதாபாத்திரங்களையும் செய்ய முடியும்னு நம்பிக்கை தந்தார். ஆனா, முக்கிய கதாபாத்திரம் ஏற்றப்ப நடக்கவே சிரமப்பட்டேன். ஏன்னா, ஆபரணங்களோட எண்ணிக்கை அதிகம். தவிர பார்வையாளர்களும் நம்மையே பார்த்துட்டு இருப்பாங்க. சின்ன தப்பு செஞ்சாலும் அது பெருசா தெரியும்.
குழுவையும் பாதிக்கும்.ஆனா, ராஜகோபால் சாரும் அவரோட மனைவி ஹானாவும் என்னை உற்சாகப்படுத்தினாங்க. தன்னம்பிக்கையை ஊட்டினாங்க. அதுதான் இந்தளவுக்கு என்னை உயர்த்தியிருக்கு. சின்னச் சின்ன கதைகளும் கூத்துல உண்டு. சில இடங்கள்ல அதை போடுவோம். அந்த வகைல சின்னக் கதைகள்ல பன்னிரெண்டு, பெருசுல எட்டு கதைகளுக்கு கூத்து கட்ட எனக்கு தெரியும்.
அதாவது ஆண், பெண் இரு வேடங்களும் ஏற்று நடிக்க வரும். பெரிய கதைகள் ஒவ்வொன்றும் எட்டு மணிநேரங்கள் நடக்கக் கூடியது. பெரும் பாலும் ராமாயணம், மகாபாரதம், குற்றால குறவஞ்சிலேந்து எடுக்கப்பட்டதாதான் இருக்கும். இதிகாசங்கள்ல வரக் கூடிய சின்னச் சின்ன கதைகளுக்கும் கூத்து கட்டுவோம். அதற்கான நடன அமைப்பு, பாட்டு, வசனம் எல்லாமே ராஜகோபால் சார்தான் எழுதித் தருவார்...’’ என்று சொல்லும் தமிழரசி 2013ல் பயிற்சியாளராக உயர்ந்திருக்கிறார். ‘‘கூத்து கலை ரொம்ப ரொம்ப பாரம்பரியமானது. இதிகாசங்களை கலை வடிவுல அறிமுகப்படுத்தறதுல கூத்துக்கு முக்கியப் பங்குண்டு. இன்னிக்கும் தமிழகத்துல இந்தக் கலைக்கு வரவேற்பு இருக்கு.
மக்கள் விடிய விடிய பார்க்க தயாரா இருக்காங்க. தமிழகம் தவிர, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் மாதிரி வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகள்லயும் நாங்க ஆடிட்டு வர்றோம். இங்கிலாந்துக்கு போன இரண்டு வார பயணத்தை மறக்க முடியாது. நாங்க ஆறு பேர் போனோம். அதுல நான்கு பேர் பெண்கள். போன வருஷம் சுவிட்சர்லாந்துல தியேட்டர்ல பயிற்சி நடந்தது. மொத்தம் மூன்று மாதங்கள். அதுல நானும் கலந்துகிட்டேன். அங்க கத்துகிட்டதை இப்ப எங்க குருகுல மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கறேன்...’’ என்றவர் யார் வேண்டுமானாலும் கூத்து கற்கலாம் என்கிறார்.
இங்கதான் பரம்பரை பரம்பரையா கூத்து கட்டற வழக்கம் இருக்கு. வெளிநாடுகள்ல அப்படியில்லை. சிறப்பு பயிற்சி எடுத்துக்கற எல்லாருமே அவங்களோட பாரம்பரிய கலைகளை ஆடறாங்க. இப்ப நம்ம நாட்டிலும் அதுபோல மாற்றம் நிகழுது. விருப்பம் இருக்கிற எல்லாருமே இந்தக் கலையை கத்துக்கலாம். எட்டு மணி நேரங்கள் தொடர்ச்சியா ஆடறது அவ்வளவு சுலபமில்லை. அதுக்கு அசாத்தியமான பயிற்சி வேண்டும். ஒருத்தராலயே எட்டு மணி நேரம் ஆட முடியாது.
அதனால ஒரு சீன்ல நான்கு பேர் வந்தாங்கன்னா அடுத்த காட்சில வேறு சிலர் வருவாங்க. அதனால அயர்ச்சி ஏற்படாது.இரவு முழுக்க கூத்து நடந்தா மறுநாள் பகல் முழுக்க தூங்குவோம். அப்பத்தான் மறுபடியும் இரவுகூத்து கட்ட முடியும். கத்திப் பேசணும், பாடணும். இதனால தொண்டை கட்டிக்க வாய்ப்பிருக்கு. அதனால குரலுக்கான பயிற்சியை முறைப்படி கத்துக்கணும். எங்க குழுவுல எட்டு வயசுலேந்து 20 வயசு வரைக்கும் இருக்காங்க. அதுல 12 பேர் பெண்கள். 20 பேர் ஆண்கள். வருஷம் முழுக்க கூத்து கட்டறோம்னு சொல்ல முடியாது.
ஆனா, விசேஷ நாட்கள்ல பிசியா இருப்போம். பெரும்பாலும் ஜனவரி முதல் அக்டோபர் வரை கூத்து நடக்கும். பிறகு பனி - மழைக்காலம். அப்ப புதிய கதைகளை உருவாக்குவோம். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் அதுக்கான பயிற்சியை எடுப்போம். பிறகுதான் அரங்கேற்றம்...’’ என்று சொல்லும் தமிழரசிக்கு இறுதி மூச்சு உள்ளவரை கூத்து கட்டும் ஆசை இருக்கிறது. ‘‘ராஜகோபால் சாரும் ஹானாவும் எனக்கு அப்பா, அம்மா மாதிரி. இந்தக் கலையை எனக்கு சொல்லிக் கொடுத்தது இவங்கதான். சின்ன வயசுலேந்து இங்கதான் இருக்கேன்.
கடைசி வரைக்கும் இங்கயே இருக்கணும்னுதான் விரும்பறேன். அப்பா கூட ‘அதான் பயிற்சி முடிஞ்சுடுச்சே... வா’ன்னு கூப்பிட்டார். மறுத்துட்டேன். இந்த குருகுலத்தை பெரிய அளவுக்கு வளர்க்கணும்...’’ சொல்லும்போதே தமிழரசியின் கண்களில் கனவு மிதக்கிறது.

No comments:
Post a Comment