அகழாய்வு செய்வதற்கு கீழடி என்ற கிராமத்தை ஏன் தேர்வு செய்தார்கள்? அதன் பின்னணி என்ன?
மத்திய தொல்லியல் துறையினர் 2013-14ஆம் ஆண்டுகளில் வைகை நதிப் படுகையில் உருவான
நாகரிகத்தைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு விரிவான கள ஆய்வை நடத்தினர். வைகை நதி துவங்கும்
இடத்திலிருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை நதியின் இரண்டு பக்கமும் மூன்று கிலோ மீட்டர்
தொலைவு வரை உள்ள அனைத்துக் கிராமங்களையும் அவர்கள் தொல்லியல் ஆய்வு செய்தனர். அதில்
சுமார் 293 கிராமங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்களாக அக்குழுவினரால்
கண்டறியப்பட்டுள்ளன. அந்த 293 கிராமங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடயங்களும்
தொல்லியல் எச்சங்களும் மிக அதிகமாக அடையாளங்காணப்பட்ட கிராமம் கீழடி. இது மதுரையிலிருந்து
15 கிலோ மீட்டர் தூரத்தில், சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கும் கீழடி ஆய்விற்கும்
உள்ள அடிப்படையான வேறுபாடு என்ன?
தமிழகத்தில், மாநில தொல்லியல் துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்று
வருகின்றன. ஆனால் அவற்றின் அளவு மிகச்சிறியது. மாநில அரசு, தொல்லியல் துறைக்கு ஒதுக்கும் நிதி
மிகச் சொற்பமே.
கேரளாவில் அம்மாநில தொல்லியல் துறையின் சார்பில் பட்டணம் எனும் இடத்தில் (சங்க கால முசிறி)
தொடர்ந்து 15 ஆண்டுகள் அகழாய்வு நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படிப்பட்ட முயற்சிகள்
நடப்பதாகத் தெரியவில்லை.
கீழடியில் அகழாய்வை மேற்கொள்வது மத்திய தொல்லியல் துறை. 1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய
தொல்லியல் துறையின் சார்பில் மிக விரிவாக நடைபெறும் அகழாய்வு இதுதான்.
கீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன?
சங்க காலத் தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை
கண்டறியப்படவில்லை. முதன்முறையாக ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான முழுமையான
அடையாளங்கள் கீழடியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வளர்ச்சி
பெற்ற முழுமையான ஒரு நகரம் இப்போது இங்கு கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு தமிழக
வரலாற்றுக் காலத்தை புதிய மறுபரிசீலனையை நோக்கி நகர்த்துகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தின்
இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் அறிவியல் பூர்வமான ஒளிபாய்ச்சும் இடமாக கீழடி இருக்கிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்குழு சமூகமாகத்தான்
வரையறுத்தார்கள். சிந்துவெளி நாகரிகத்தைப் போல, ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள்
கருத்தின் அடிப்படை. இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ள
முடியாது. எனவே கடந்த இலக்கியத்தைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அவர்களது
கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால், இன்று கீழடியில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் அந்தக் கருத்தியலை
தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கின்றன.
நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்திய வரலாற்றுப் பேரவையின் (ஐசிஎச்ஆர்) மாநாடு
இருவாரங்களுக்கு முன் ( 2016 டிச.29,30 தேதிகளில்) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் கீழடி
கண்டுபிடிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்த அமர்வுக்கு தலைமை வகித்த வரலாற்று அறிஞர்
பேராசிரியர் ரொமிலா தாப்பர், “தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவை.
இக்கண்டுபிடிப்புகளின் மூலம் தமிழக வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம்
இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
கண்டறியப்பட்டுள்ள அந்த நகரத்திற்கு கீழடி என்றுதான் பெயரா?
வரலாற்றில் இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒன்று, ஹோமர் எழுதிய இலக்கியத்தில் “டிராய்”
என்ற பெயர் இருப்பதன் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த நகரத்தை பூமியின் அடியில்
ஆய்வு செய்து கண்டுபிடித்தார்கள். இது ஒரு வகை என்றால், இன்னொரு வகையாக இந்தியாவில் ஹரப்பா-
மொகஞ்சதாரோவை குறிப்பிடலாம். அங்கு கண்டறியப்பட்ட நகரத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்தது
என்று யாருக்கும் தெரியாது. கண்டறியப்பட்ட இடத்தில் இருக்கும் கிராமங்களின் பெயர்தான் ஹரப்பா-
மொகஞ்சதாரோ.
இப்போது கீழடியில் கண்டறியப்பட்டுள்ள நகரத்தின் பெயர் என்னவென்று தெரியாது, இப்போது இருக்கும்
அந்த கிராமத்தின் பெயர் கீழடி என்பதால், அந்தப் பெயரிலேயே அழைக்கிறோம். ஆனால், சங்க கால
இலக்கியங்களில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில், இது பழைய மதுரையாக இருப்பதற்கான
வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், சங்க இலக்கியத்தில் மதுரை என்பது திருப்புவனத்திற்கு நேர்
மேற்கிலும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கிலும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய
மதுரையோ திருப்பரங்குன்றத்திற்கு வடகிழக்கிலும் திருப்புவனத்திற்கு வடமேற்கிலும் இருக்கிறது.
ஆனால், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள நகரமானது சங்க இலக்கியத்தில் வருகிற நிலவியல்
குறிப்பின் படி மிகத் துல்லியமான இடத்தில் அமைந்துள்ள நகரமாக இருக்கிறது. எனவே இதுவே சங்க கால
மதுரையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நகர நாகரிகம் என்று எதன் அடிப்படையில் தொல்லியல்
ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்?
ஒரு நகரத்தினுடைய முழுமையான கட்டமைப்பு அங்கு கண்டறியப்பட்டுள்ளது. வரிசை வரிசையாக
கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; அந்த தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளிச்
செல்லவுமான அமைப்புகள்; அந்தக் கால்வாய் தடத்தை ஒட்டி சிறிதும் பெரிதுமான ஆறு உலைகள்;
கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண்
குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள்.
இவைகளெல்லாம் முதன்முறையாக கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடுவதற்கு தமிழ்நாட்டிலோ அல்லது
தென்னிந்தியாவிலோ வேறு இடங்களே இல்லை.
மேலும் ஆப்கானிஸ்தானப் பகுதியைச் சேர்ந்த சூது பவளத்தினால் ஆன மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த
மட்பாண்டங்களும் ,வட இந்திய பிராகிருத பெயர்கள் தாங்கிய எழுத்துக்களும் கிடைத்துள்ளன. பானை
ஓடுகளில் இதுவரை 73 பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல, ஒரு தொழிலகம் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய
தக்கையில் துவங்கி எண்ணற்ற தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மொத்தத்தில், வணிகமும் பண்பாடும் ஊடறுத்துக் கிடக்கும் பெருநகரமாக இது இருந்துள்ளது. கீழடியில்
கண்டறியப்பட்ட சுமார் 5000க்கும் மேற்பட்ட பொருட்களை முழுமையாக பட்டியலிட முடியாது என்றாலும்,
வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சிறந்த சான்றுகளை நம்மால் அங்கே காண
முடிகிறது.
இங்கு கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தீர்களே, அது எந்த நிலையில்
இருக்கிறது?
மத்திய தொல்லியல் துறையின் கீழ் இந்தியாவில் 44 கள அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அதில்
இருப்பது ஒன்றே ஒன்று மட்டும்தான். அது சென்னை கோட்டைக்குள் (தலைமைச் செயலகம்) இருக்கிறது.
வேறு எங்கும் அருங்காட்சியகம் அமைக்கவில்லை. இந்நிலையில், கீழடியில் கண்டறியப்பட்ட
பொருட்களை, கள அருங்காட்சியகம் அமைத்து, மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று
வலியுறுத்தினோம். இதன் தொடர்ச்சியாக சிலர் நீதிமன்றத்தையும் அணுகினர். கள அருங்காட்சியகம்
அமைக்க நிலம் தர வேண்டியது மாநில அரசு. நமது கோரிக்கைகளை ஏற்று, அதற்கான நிலத்தை
ஒதுக்கித்தர மாநில அரசு முன்வந்துள்ளது. அதை வரவேற்கிறோம்.
கீழடி அகழாய்வுப் பணிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை என்ன?
கீழடியில் இரண்டு ஆண்டுகள் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான
அனுமதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கான எந்த காரணத்தையும் அரசு
தெரிவிக்கவில்லை.
குஜராத்தில் உள்ள தொழவீராவில் 13 ஆண்டுகள் அகழாய்வு செய்தவர்கள். ஆந்திராவில் உள்ள
நாகார்ஜூன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்தவர்கள், அகிசித்ராவில் 6 ஆண்டுகளும்,
குஜராத்தில் உள்ள லோத்தலில் 5 ஆண்டுகளும் அகழாய்வு செய்தவர்கள், கீழடி ஆராய்ச்சியை மட்டும்
இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வருவதின் பின்னணி என்ன என்பது தான் நமது கேள்வி.
கீழடியில் இருக்கிற தொல்லியல்மேடு 110 ஏக்கர். இதில் கடந்த 2 ஆண்டுகளாக அகழாய்வு நடந்துள்ள
பரப்பளவு வெறும் 50 செண்ட் மட்டும்தான். அதாவது ஒரு சதவீத நிலப்பரப்பு கூட ஆய்வுக்கு
உட்படுத்தப்படவில்லை. இந்நிலையில்தான், அதை நிறுத்தி வைப்பது என்ற முடிவை மத்திய அரசு
எடுத்துள்ளது.
அகழாய்வில் கிடைக்கும் கரிமூலப்பொருட்களின் மாதிரியை வேதிப்பொருள் ஆய்வகங்களுக்கு அனுப்பி
“கார்பன் – 14 பகுப்பாய்வு எனும் முறையில் ஆய்வு செய்து, அப்பொருளின் காலத்தை நிர்ணயிக்கின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலைசிஸ் ஆய்வு நிறுவனத்திற்கு இவை
அனுப்பப்படுகின்றன.
அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14
பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறை முடிவு செய்கிறது.
இராஜஸ்தானில் உள்ளகாளிபங்கனில் நடத்தப்பட்ட அகழாய்வில் 28 பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு
அனுப்பிவைத்துள்ளனர். தொழவீராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி
வைத்துள்ளனர். கிரிசராவில் இருந்து 15 பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் இரண்டே இரண்டை மட்டும்தான்
கார்பன் – 14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. குறைந்தபட்சம்
10 பொருட்களின் மாதிரியையாவது ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்பது தொல்லியலாளர்களின் கருத்து.
இரும்புக்காலம் துவங்கி, வரலாற்றுக் காலம் வரை தொடர்ச்சியான ஆதாரங்கள் கிடைக்கும் இடம் கீழடி.
எனவே இந்த ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக நிறுவ இவ்வாய்வு மிக முக்கியமானது.
கீழடியில் அகழாய்வை தொடர அனுமதி மறுப்பதும் அகழாய்வில் கண்டறியப்பட்டபொருட்களை ஆய்வுக்கு
அனுப்ப மறுப்பதுமான செயல் மத்திய தொல்லியல் துறையின் அப்பட்டமான பாரபட்சமே.
இந்தப் பிரச்சனையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய கலாச்சார துறை அமைச்சருக்கு
கடிதம் எழுதி, அதற்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?
எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது. அவரது கடிதத்திற்கு மத்திய கலாச்சார துறை
அமைச்சர் ‘கீழடி அகழாய்வு பற்றி அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை வந்த பின், அகழாய்வைத்
தொடர்வது பற்றி முடிவு செய்வோம்’ என்று பதில் அளித்துள்ளார். இதே பதிலைத்தான் தொல்லியல்
துறையின் தலைமை இயக்குநரும் பிற ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இந்த பதிலின் மூலம் தான்
இவர்களின் உண்மை முகம் வெளிவரத்துவங்கியுள்ளது.
கீழடியோடு அகழாய்வு துவக்கப்பட்ட இடங்கள் வாட் நகர் மற்றும் பிஞ்ஜோர். வாட்நகர், பிரதமர்
மோடியின் சொந்த ஊராகும். குஜராத்தில் உள்ளது. பிஞ்ஜோர், இராஜஸ்தானில் உள்ளது.
இந்த இரண்டு இடங்களிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகழாய்வு நடந்து முடிந்துள்ளது. 2017ஆம்
ஆண்டுக்கான துவக்க நிகழ்ச்சி வாட் நகரில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதியே கொண்டாடப்பட்டுவிட்டது.
பிஞ்ஜோரில் ஜனவரி 1 ஆம் தேதி துவக்க விழா நடந்துள்ளது- இங்கெல்லாம் இவர்கள் அறிக்கையைப்
பெற்றுத்தான் அடுத்த ஆண்டிற்கான அனுமதியை வழங்கினார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
2005 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஆதிச்சநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்) அகழாய்வு முடிவுகள் மற்றும்
அறிக்கை தற்போது வரை வெளிவரவில்லை. அந்த அறிக்கையைப் பெற்று வெளியிட வேண்டும் என்று
தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அகழாய்வு முடிந்து பத்து ஆண்டுகளுக்குப்
பிறகும் அறிக்கையை வெளியிட முயற்சி செய்யாத தொல்லியல் துறை, அகழாய்வு நடந்து கொண்டிருக்கும்
இடத்தில் அறிக்கையைக் கேட்டு அகழாய்வை நிறுத்துகிறது. இவை இரண்டுக்கும் இருப்பது ஒற்றை
நோக்கம்தான்.
கீழடி அகழாய்வு தொடர இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?
கீழடியின் முக்கியத்துவம் அனைத்து வகையிலும் உணரப்பட வேண்டும். அடையாளங்களை அழிப்பதையும்
மறைப்பதையும் வெளிப்படையாகச் செய்யும் இந்துத்துவா அரசியலின் பார்வையில் இப்போது கீழடி
சிக்கிக் கொண்டிருக்கிறது. இங்கு கிடைத்துள்ள 5000க்கும் மேற்பட்ட பொருட்களில் மதஅடையாளம்
சார்ந்த பொருட்கள் என்று எதையும் சொல்லமுடியாது. பெரு மதங்கள் உருவாவதற்கு முன்பே சிறந்து
விளங்கிய ஒரு நாகரிகத்தின் அடையாளம்தான் கீழடி.
மொழியியல் அறிஞர் கால்டுவெல், தமிழ் மொழியின் சிறப்பை பற்றி கூறுகிறபோது, இது ஒரு
சமயச்சார்பற்ற மொழி என்று மதிப்பீடு செய்தார். இந்த மதிப்பீட்டிற்கும் கீழடி நாகரிகத்திற்கும் இருக்கிற
ஒற்றுமையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தேசிய இனங்களின் தனித்துவமான பண்பாட்டின் மீதும் வரலாற்றின் மீதும் ஒரு கொடுந்தாக்குதல்
அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் கீழடியில் கிடைத்துள்ள நாகரிகத்தின் எச்சங்களை
பாதுகாப்பதும் அங்கு அகழாய்வை முன்னெடுப்பதும் தமிழ்ச் சமூகத்தின் அர்த்தமிக்க வாழ்வியல்
வரலாற்றுச் சாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.
இங்கு கிடைத்துள்ளவற்றைப் பற்றிய கருத்துக்களையும் விவாதங்களையும் தொல்லியல் அறிஞர்கள்
முன்னெடுக்கட்டும். ஆனால் , அகழாய்வை அனுமதிக்க மாட்டோம் என்ற முடிவு அரசியல் ரீதியானது.
அதனை அரசியல் களத்தில் தான் சந்தித்தாக வேண்டும். தமிழகத்தின் அரசியல் கட்சிகள் இதுகுறித்து தீவிர
வினையாற்றவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அரசின் வஞ்சனையை
கண்டித்தும், தமிழ்ச் சமூகத்தின் நாகரிக வரலாற்றை முழுமையாக வெளிக் கொண்டு வரும் விதமாக கீழடி
அகழாய்வை முழுமையாகத் தொடர வேண்டும் என்றும் சமீபத்திய அறிக்கையில் வலியுறுத்தி இருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி தமுஎகச எடுத்துள்ள முயற்சிகள் பற்றி…
இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறிய கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற மத்திய அரசு,
விஞ்ஞானப் பூர்வமான ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட கீழடியில் ஆய்வைத் தொடர அனுமதி
மறுக்கிறது.
அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ. 151 கோடியை ஒதுக்கியுள்ள இந்த அரசு தான்
கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ரூ. 1 லட்சத்தை
ஒதுக்கியுள்ளது.
இந்த அப்பட்டமான வரலாற்றுத் துரோகத்திற்கு எதிராக தமிழகத்தின் அரசியல் கட்சிகளும்,
அறிவுத்துறையினரும், ஊடகவியலாளர்களும் ஒன்று திரள வேண்டும். இதற்காக மதுரையில் ஜன.22 ஆம்
தேதியும் சென்னையில் ஜன.24ஆம் தேதியும் நடத்த கண்டன இயக்கங்களை தமுஎகச திட்டமிட்டுள்ளது.
இதில் அனைவரையும் பங்கெடுக்க அழைக்கின்றோம்.
இவ்விஷயத்தில் மாநில அரசு வலிமை மிக்க தலையீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக எம்.பிக்கள்
நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
கீழடியின் மேல் விழும் அடி நமது பண்பாட்டின் மீதும் வரலாற்றின் மீதும் ஜனநாயக மரபுகளின்அகழாய்வு செய்வதற்கு கீழடி என்ற கிராமத்தை ஏன் தேர்வு செய்தார்கள்? அதன் பின்னணி என்ன?

அறிவுத்துறையினரும், ஊடகவியலாளர்களும் ஒன்று திரள வேண்டும்.